http://sivasuthan.com/thirukurals/
a backup of my site's Thirukural page (Tamil and English)
preview:
அதிகாரம்/Chapter/Adhigaram:
கடவுள் வாழ்த்து/The Praise of God/Katavul Vaazhththu 1
இயல்/ChapterGroup/Iyal:
பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal:
அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
குறள் 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
கலைஞர் உரை: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை
Couplet 1 A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains
Explanation As the letter A is the first of all letters, so the eternal God is first in the world
Transliteration Akara Mudhala Ezhuththellaam Aadhi Pakavan Mudhatre Ulaku