Skip to content

Latest commit

 

History

History
114 lines (92 loc) · 25.9 KB

NF - Orientation.md

File metadata and controls

114 lines (92 loc) · 25.9 KB

வழிகாட்டல் ஆவணங்கள்

கடந்து வந்த பாதையும் கற்றல்களும்

நமது பொது இலக்குகள்

  • தொலைநோக்கு
  • நோக்கங்கள்
  • விழுமியங்கள்
  • Road Map
  • வியூகம்
  • பல்வகைத்தன்மை
  • Code of Conduct
  • நூலக நிறுவனத்தின் நோக்கங்கள் (mission, objectives, values, roadmap, strategy) நான் அனைவரும் சேர்ந்து உருவாக்கியதே. எனினும் அதைப் புரிந்து கொள்வதில், அல்லது அவற்றோடு கூட வேறுபாடுகள் இருக்கலாம். அந்த வேறுபாடுகள் பாரிய misalignment ஆக இருந்தால், அதை விரைந்து அடையாளப்படுத்தி தெளிவுபடுத்திக் கொள்ளுதல், முடிவுகள் இழுத்தடிக்கப்படுவதை, அல்லது செயற்பாடுகள் விறைந்து போவதைததைத் தடுக்க உதவும்.

நமது முதன்மைப் பணிகளும் சேவைகளும்

  • எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்
  • உசாத்துணைச் சேவைகள்
  • ஆய்வு உதவி
  • நூலக இலக்குகள்/பணிகள் சார் தன்னார்வலர் சமூகத்தை வளர்த்தல்
  • ஆவணப்படுத்தல்
  • ஆய்வு அடிப்படையிலான ஆவணப்படுத்தல்
  • வாய்மொழி வரலாற்று ஆய்வு நடுவம்
  • எண்ணிம நூலகம்
  • பல்லூடக ஆவணகம்
  • பள்ளிக்கூடம் - எண்ணிம கற்றல் வளங்கள்
  • சுவடிகள் ஆவணகம்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • சிறப்புச் சேகரங்கள், ஆய்வுப் பொருட் சேகரங்கள்
  • நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆவணகவியல், அருங்காட்சியகயல் மற்றும் தொடர்புடைய துறைகள் சார்ந்த களப் பணி சார்ந்த ஆய்வு
  • கருவியாக்கம், நிரலாக்கம், மென்பொருள் விருத்தி
  • பட்டியலாக்கம், மீதரவு உருவாக்கம்
  • நூலக, ஆவணக சீர்தரங்கள்
  • செயற்திட்டங்கள்

நாம் யார்

நாம் இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்புடைய பன்முக ஆவணப்படுத்தல் பணிகளில் ஈடுபாடு உடைய தன்னார்வலர்களும் ஊழியர்களும் ஆவோம். நாம் எழுத்தாளர்கள், தொகுப்பாசிரியர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், நூலகவியலாளர்கள், மூகாமைத்துவ வல்லுனர்கள், நிரலாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆவோம்.

நிறுவன கட்டமைப்பு

நூலகநிறுவனமானது இலங்கையில் தனது தாய்நிறுவனத்தையும் பிரித்தானியா கனடா நோர்வே போன்ற நாடுகளிலும் சட்டவலுவுள்ள கிளைகளை கொண்டுள்ள அமைப்பாகும். அதன் பணியிலக்கு சார்ந்து அது நாடுகடந்த தன்மையுடையது. அதன் உறுப்பினர்கள், சக உறுப்பினர்கள் பல்வேறு ஆட்புல எல்லையில் இருந்து கொண்டு பங்களிக்கிறார்கள். இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நூலகநிறுவனமானது உறுப்பினர்களை அடிப்படையாக் கொண்ட லாபத்தை கருதாத லாபத்தை உறுப்பினர்களின் தனிப்பட்ட நன்மைக்கு கொடுக்காத வகையில் தனது கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

பணிப்பாளர் சபை- இலங்கை நூலகநிறுவனத்தின் பணிப்பாளர் சபையும் வழிகாட்டுநர் சபையும் 2011 முதல் 2016 வரை வேறு வேறாக கருத்தப்பட்ட போதும் நடைமுறையில் வழிகாட்டுநர் சபையே தீர்மானமெடுக்கும் முதன்மைசபையாக இருந்துவந்தது.தொழில்நட்பத்தின் வளர்ச்சி பங்காளர்களின் ஆட்புல எல்லைகள் மெய்நிகர் தொடர்பாடலின் சட்டவலு என்பவற்கை கருத்திற்கொண்டு வழிகாட்டநர்சபையையும் இலங்கை பணிப்பாளர் சபையையும் ஒருங்கிணைக்கும் சட்டஅடிப்படையில் ஒன்றாக இணைக்கும் முடிவு 2016ல் எட்டப்பட்டது.2011-2016 காலகட்டத்தில் வழிகாட்டுநர் சபை கூட்டங்களில், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பங்காளர்கள், மூதவை உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பின் பேரில் வருபவர்கள், அவதானிகள் என பல்திறத்தவரின் பங்கேற்புடன் நடைபெற்றது.2017முதல் வழிகாட்டுநர் சபையானது பணிப்பாளர் சபையாக ஒரே சபையாக மாறுவதுடன் பணிப்பாளர் சபையானது வழிகாட்டுநர் சபை பேணிய நடைமுறைகளை பின்வருமாறு பேணிக்கொள்ளும்.

பணிப்பாளர் சபைகூட்டங்கள் மெய்நிகர் கூட்டங்களாக அமையலாம். வழிகாட்டுநர் சபை என்ற பிரயோகம் கைவிடப்படும்.

பணிப்பாளர் சபை கூட்டங்களில் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் பல்வேறு நடிபங்குகளை ஆற்றுபவர்களும் கலந்து கொள்வர். பணிப்பாளர் சபைக் கூட்டங்களுக்கு வேண்டப்படும் போது அல்லது கோரிக்கை விடப்படும் போது, அவதானிகளாக மூதவை உறுப்பினர்கள் பயனாளர்கள் கொடையாளிகள் ஆர்வலர்கள் பங்குபற்றுவார்கள்.

பணிப்பாளர் சபை எண்ணிக்கை விரிவுபடுத்தப்படும். பங்களிப்பு நேரத்தை ஒதுக்கி பங்களிக்கு தன்மை என்பவற்றை கருத்திற்கொண்டு பணிப்பாளர் சபைக்கு ஒருவர் உள்வாங்கப்படுவார்.

பணிப்பாளர் சபை தனியே பணிப்பாளர் சபை உறுப்பினர்களை மட்டும் கூட்டி புதிய உறுப்பினர்களை உள்ளீர்தல், உள்ளக விசாரணை போன்ற விடயங்களை தனிப்பட ஆராய்ந்து முடிவெடுக்க முடியும்.

பணிப்பாளர் சபையானது ஏனைய பங்காளர்களுடன் கூடும் போது நடிபங்குகளுக்கு பொறுப்பானவர்கள் வாக்களிக்கும் உரிமையை மதிக்கும்.

பணிக் குழுக்கள் மற்றும் நடிபங்குகள்: need to write குறிப்பான செயற்திட்டங்கள், செயலாக்கங்கள் தொடர்பான உள்ளீடும் முடிவெடுத்தலும்

மூதவை : need to write

(https://docs.google.com/document/d/1xHDGKgzjRYDObbzR6LSDUANqL2NLzk3CL6h_Au5OEIQ/edit?usp=sharing): பொறுமையான

சிறப்பு சபைகள்: தேவையேற்படும் போது   பணிப்பாளர் சபையானது       சிறப்புசபையை நியமித்து விதப்பரையைக் கோரி அதன் பேரில் முடிவு எடுக்கமுடியும். எடுத்துக்காட்டு- உள்ளக விசாரணை, தொழில்நுட்பமொன்றை தெரிதல், செயற்றிட்டத்தை வடிவமைத்தல்

மதியுரைஞர்கள் குழு :need to write

எப்படி முடிவுகள் எடுக்கப்படுகின்றன

  • வழிகாட்டுநர் சபையே முதன்மை முடிவெடுக்கும் சபை ஆகும்.
    • பணிப்பளார்(வழிகாட்டுநர் சபை) ஊடாக நாம் இணக்க முடிவு (Consensus Decision) எடுப்பதையே விரும்புகிறேம். அவ்வாறு இயலாமல் போகையில் வாக்கு அடிப்படையில் எடுக்கிறோம். Convener Role சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு quarter ம் முடிவுசெய்யப்படுகிறது. * நிறுவனமானது தனிநபர்களின் பங்களிப்பை மதிக்கின்றது. அவரின் பங்களிப்பை ஆவணப்படுத்தும். தனிநபரின் பதவிநிலை காரணமாக எவருக்கும் சிறப்பு அதிகாரங்கள் இல்லை.
    • மறுபரிசீலனை - வாக்கு அடிப்படையில் சபை ஒரு முடிவை எடுக்கும் போது அது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனத்தின் வியுகசட்டகம் கொள்கை விழுமியங்களுக்கு எதிரானது என ஒரு ஆர்வலர் கருதினால் அத்தகு தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி அதனை மூதவைக்கோ அல்லது ஒரு சிறப்புசபையை நியமித்து அதற்கோ கவனப்படுத்தி அச்சபையின் விதப்புரையின் பேரில் மீளவும் தீர்மானத்தை பரிசீலிக்கவும் முடிவெடுக்கவும் வேண்டும். இங்கு ஆர்வலர் என்பவர் உறுப்பினராக அவதானியாக பயனாளியாக என எவராகவும் இருக்கு முடியும( (sober second thought, conflict resolution).
    • Disagree and Commit. நாம் குறிப்பான விடயங்களில் வேறுபடலாம். ஆனால் நிறுவனமாக முடிவெடுத்த பின்பு, அனைவரும் அந்த முடிவுக்கு ஆதரவுதந்து நகர்த்த வேண்டும். குறிப்பான ஒரு பக்கமாக முடிவை நகர்த்துவதற்காக நாம் முடிவெடுத்தலையோ அல்லது நிறுவனத்தின் செயற்பாடுகளை இழுப்பறிக்கக் கூடாது.
    • பதவிகள் இல்லை. நடிபங்குகளும் அவை சார்ந்த பொறுப்புகளும் உண்டு.
    • யாரும் வழிகாட்டுநர் சபையில் ஒரு அவதானியாகக் (Observer) கலந்து கொள்ள முடியும். (சில privacy சார்ந்த விடயங்கள் தவிர்த்து)
    • புதிய எண்ணங்கள், கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்டுத் திட்டமிடலில் இல்லாத செயற்திட்டங்களுக்கு எண்ணங்களுக்கு முழுமையான வெளி வள ஒத்துகீடு அவசியம் ஆகும்.
    • அனைத்து வழிகாட்டுநர் சபை உறுப்பினர்களும் Governance Board இல் இடம்பெறுவது குறுத்து ரமணேஸ் தற்போது ஆய்து வருகிறார். இதனூடாக ceremonial Board நடிபங்கு இல்லாமல் போகும்.
    • நூலக நிறுவனம் சார்பாக மேற்கொள்ளப்படும் வெளித் தொடர்புகள் NF : Process : Initiatives and Proposals அல்லது NF : Process : Communications இல் அறிவிக்கப்பட வேண்டும்.

.

  • மேலாண்மை: Operations level மனித வளங்கள், திட்டச் செயலாக்கம், கணக்கு மற்றும் பிற உள்ளீடுகள்

எப்படிச் செயற்படுகிறோம்

  • ஆண்டுத் திட்டமிடலும் வரவுசெலவும் (Annual Plan and Budget - APB) - இதனூடாகவே நாம் எமது நிகழ்சித் திட்டத்தை பெருதும் வரையறை செய்கிறோம்.
  • செயற்திட்டங்கள், செயலாக்கங்கள் - பணிக் குழுக்கள் (Processes, Projects, Units - Working Groups)
    • நூலக நிறுவனத்தின் முக்கிய 29 செயலாக்கங்கள் (Key Business Processes) அடையாளம் காணப்பட்டுள்ளன.
    • ஒவ்வொரு முக்கிய செயலாக்கத்துக்கும் ஒரு ஊழிய ஒருங்கிணைப்பாளரும், ஒரு தன்னார்வல செயலாக்கக் கண்காணிப்பாளரும் இருப்பது விரும்பப்படுகிறது.
    • வளந்த் திரட்டுதல், மனித வளங்கள், தொடர்பாடல், எண்ணிமப் பாதுகாப்பு உட்பட்ட முக்கிய செயலாக்கங்கள் வழிகாட்டுநர் சபை நியமிக்கும் ஒரு உப குழுவால் முன்னெடுக்கப்படுகின்றன.
    • ஒவ்வொரு நடப்பு செயலாக்கமும் செயற்திட்டமும் இரண்டு மின்னஞ்சல் இழைகளை கொண்டு இருக்கும். NF : Process/Project : Example Process/Project. மற்றும் NF : Process/Project : Example Process/Project - Working Group. முதலாவது இழை வழிகாட்டுநர் சபைக்கு செயலாக்கம்/செயற்திட்டம் தொடர்பான இற்றைப்படுத்தலுக்கானது. இரண்டாவது இழை பணிக் குழுவுக்கானது. எந்த ஒரு வழிகாட்டுநர் சபை உறுப்பினரும் பணிக் குழுவில் இணைந்து நடைபெறும் உரையாடல்களை பின்தொடர முடியும்.
    • NF : Process : RB Meetings முக்கிய முடிவுகள், உரையாடல்கள் நடைபெறும் இழை ஆகும்.
    • ஒவ்வொரு செயற்திட்டமும் செயலாக்கமும் பயன்பாட்டுக்குத் தேவையான அடிப்படை ஆவணங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • Operations: Office Management, Core Work, Ground Work/Outreach, Finance
    • தற்போது இது பெரும்பாலும் கஜானி மற்றும் பரணியையே பெருதும் தங்கி உள்ளது. மனித வளங்கள் உப குழு தற்போது தேவைகளை ஆராய்ந்து வருகிறது. பரிந்துரைகளை முன்வைக்கும்.
  • Initiatives and Proposals - NF : Process : Initiatives and Proposals மற்ரும் NF : Process : Labs மற்றும் NF : Process : Noolaham Foundation Study Circle ஆகியன புதிய எண்ணங்களை, முன்மொழிவுகளை ஊக்குவிப்பதற்கான களங்கள் ஆகும். வேகமாக முன்மாதிரிகளை (faster prototypes) உருவாக்குவது, திரும்பி அல்லது திருத்திச் செய்யக் கூடிய பணிகளை விரைந்து செய்து பார்ப்பது (easily reversable ideas can be acted on faster) ஆகியன எமது நோக்கங்கள் ஆகும். அதே வேளை ஒரு முறையான செயற்திட்டமாக மாறுவதற்கு தேவைப்படும் வளங்கள் தரப்பட்டு இருக்க வேண்டும்.
    நீண்ட முடிக்கப்படாத அல்லாத செயற்படுத்தப்படாத செயற்திட்டங்கள் விரும்பபப்டுவதில்லை. We don't want to accumulate ideas debt, metadata debt or technical debt.

அறிக்கையிடலும் தொடர்பாடலும்

  • வழிகாட்டுநர் சபை சந்திப்புக் குறிப்புகள் - RB Meeting Agenda, Action Items, Decisions, Discussion Notes
  • மாதாந்த திட்ட அறிக்கை - Monthly Program Report
  • மாதாந்த நிதி அறிக்கை - Monthly Finance Report
  • ஆண்டுத் திட்டமிடலும் வரவுசெலவும் (Annual Plan and Budget - APB)
  • செயற்திட்ட அறிக்கைகள் - Project Reports as required
  • ஆண்டு அறிக்கைகள் - Annual Reports
  • வலைத்தளம், வலைப்பதிவு, சமூக வலை

வளந் திரட்டல்/நிதி

  • நூலக நிறுவனம் தன்னார்வலர்களால் நெறிப்படுத்தப்படுகின்றது, ஆதரவு தரப்படுகின்றது (driven and supported/supplemented by volunteers). தொழில்முறை ஊழியர்களால் இயக்கப்படுகின்றது (managed and operated by professionals).
  • ஈழத் தமிழ் சமூகத்திடம் பரவலான முறையில் எமது பெரும்பான்மை நிதியைப் பெறுகிறோம். தனிநபர் பங்களிப்புக்கள், நிகழ்வுகள் உணவு விற்று நிதி திரட்டுவது, கடைகளில் உண்டியல், சமய நிறுவனங்களில் நிதி உதவி உட்பட்ட பல வழிகளில் நிதி திரப்பட்டப்படுகின்றது. சில குறிப்பான செயற்திட்டங்களுக்கு நிறுவனங்களிடம் நிதி திரட்டப்படுகின்றது.
  • கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் (audited accounts)
  • நிறுவ்னத்துக்கான தேவை அதன் நோக்கங்களை, பணிகளை முன்னெடுத்துச் செல்வதே. எமது கவனம் முதன்மையாக பணிகளை முன்னெடுத்துச் செல்வதே. நிறுவனம் Non-Profit Industrial Complex ஆக வளர்வது அல்ல. வணிகங்களைப் போல் எம்மை validate செய்ய தொடர்ச்சியான expansion தேவை இல்லை.