Skip to content
வே. இளஞ்செழியன் edited this page Jul 13, 2014 · 3 revisions

செய்ய வேண்டியப் பணிகள்

சொல்திருத்தியை மேம்படுத்துவதற்கு இன்னும் பல பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். ஆர்வமுள்ளோர் அவற்றை எடுத்துச் செய்யலாம்.

  1. எண்ணுப்பெயர்களை அகராதியில் சேர்த்தல். தற்போது "எழுபத்து", "தொல்லாயிரத்து", போன்ற சொற்கள் இல்லை.
  2. முக்கிய இடப்பெயர்களைச் சேர்த்தல். எ.கா. "சென்னை", "கோலாலம்பூர்", "புதுவை", இங்கிலாந்து".
  3. தொழிற்பெயர்களைச் சேர்த்தல். எ.கா. "படித்தல்", "உண்ணல்", "மகிழ்தல்".
  4. பன்மைப் பெயர்களைச் சேர்த்தல். எ.கா. "மாடுகள்", மாந்தர்கள்", "ஞானிகள்".
  5. முக்கிய உயர்திணைப் பெயர்களைச் சேர்த்தல். எ.கா. "ராமு", "ஜெயலலிதா", "குமுதா", "மணியன்".
  6. விடுபட்டுள்ள தொகைச் சொற்களைச் சேர்த்தல். இவற்றுள் வினைத்தொகை (எ.கா. "செய்தொழில்"), பண்புத்தொகை (எ.கா. "வெண்மதி", "செந்தாமரை"), உவமைத்தொகை (எ.கா. "தேன்மொழி", "பொன்மேனி"), உம்மைத்தொகை (எ.கா. "ஆடுமாடு", "காய்கறி"), போன்றவற்றோடு ஏனைய தொகை (எ.கா. "பச்சைக்கொடி", "யானைக்குட்டி", "பசும்பொன்", "அரும்பணி") சொற்களும் அடங்கும்.
  7. இரட்டைக் கிளிவிகளைச் சேர்த்தல். எ.கா. "சலசல", "தகதக".
Clone this wiki locally